Wednesday, December 30, 2009

வளையாடும் கை !!




உனது வளையாடும்
அழகான கை
தீண்டவே..

தலையில்
இலையொன்று
விழ வேண்டுமே !!

Monday, December 28, 2009

நெற்றி பொட்டு !!




சுற்றி என்னை
துரத்தும் துயரமடி..
என்னை
நெற்றி பொட்டுக்கடியில்
வைத்துக்கொள்ளடி!!


நெற்றி பொட்டு
உதிர்ந்தால்
வெயிலடிக்கும்
உன்னை..
நெஞ்சுக்குள்ளே
மறைப்பாள்
இளையக்கொடி!!

Flickr Link

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...




நினைப்பதெல்லாம்
நடந்துவிட்டால்
தெய்வம்
ஏதுமில்லை ....

Saturday, December 12, 2009

ஒரு துண்டு பனிக்கட்டி




கூரியர் தருகிற முத்துக்குமார்
அலுத்துக்கொள்ளவில்லை மழையை.
'நாலு நாட்களாய்
நல்ல மழை சார்'
சொல்லும்போதே
ஈரமாய்ச் சிரித்தார்.
கையெழுத்திட்டு வாங்கிய
இந்தச் சிரிப்பைவிடக் கூடுதலாக
என்ன இருந்துவிடப்போகிறது
கடித உறைக்குள்!


- கல்யாண்ஜி

Photo From

Tuesday, December 8, 2009

தழும்புகளாய் ...!!





காதல் ஒன்றும்
காயமல்ல ..
கால போக்கில்
ஆறிப்போக ..

நெஞ்சமெல்லாம்
வாழுதே
தழும்புகளாய் ...!!

Saturday, November 28, 2009

கடவுளின் குற்றம் !





நீ
ஊரே கொண்டாடும்
சாமிதான்
என்றாலும்
சப்பரம்
தூக்குபவன் தான்
முட்டுக் கொடுக்க
வேண்டும் !

- தாமிரா

மழை நிலா !!




மழையில்
நிலா பார்த்த
இரவில்
நிலவில்
மழை பெய்யும்
கனவொன்று
கண்டேன் !

-முகுந்த் நாகராஜன்

Wednesday, November 18, 2009

இன்னிசை மட்டும்...


இன்னிசை மட்டும்
இல்லையென்றால் நான்
என்றோ என்றோ
இறந்திருப்பேன் !!

செவ்வாய் !!




செவ்வாயில் ஜீவராசி
உண்டா என்றே
தினந்தோறும்
விஞ்ஞானம்
தேடல் கொள்ளும்

உன் செவ்வாயில்
உள்ளதடி
எனது ஜீவன்
அது தெரியாமல்
விஞ்ஞானம்
எதனை வெல்லும்??

Monday, November 16, 2009

கடவுளாதல் !




விடுதி அறை எண் 16-ல்
வன்கலவி நடைபெறுகிறது
அறை எண் 17-ல்
நீங்கள்தொலைக்காட்சிப் பெட்டியின்
ஒலி அளவை உயர்த்திக்கொள்கிறீர்கள்.
அந்த நெரிசல் பேருந்தில்
அந்தப் பள்ளிச் சிறுமியிடம்
அந்த வயோதிகர்அத்துமீறுகிறார்
உங்கள் நிறுத்தத்துக்கு
முன்னமே இறங்கிக்கொள்கிறீர்கள்.
படிக்கப்படாமல் கதறுகிறது
ஏ+ ரத்தம் யாசிக்கும் குறுந்தகவல்
புது மோஸ்தர்
அலைபேசியில்புதிய
நீலப் படங்களைச்
சேமிக்கத் தெரியாமல்
அல்லாடுகிறீர்கள்.
பெருநோய் மூட்டை
ஒன்றுஒன்றே
கால் விரல்களுடன்
ஒரு கை ஏந்துகிறது
செருப்பில் பசை மிட்டாய்
ஒட்டியதாக கள்ள லாகவத்துடன்
நிலம் தேய்த்தபடியே
கடந்து செல்கிறீர்கள்.
அண்டைத் தீவில்
அழுகிய நரகலாய் வாழ்வு
அவசரமாய் பக்கம் திருப்பி
சினிமா செய்திகளுக்குத்
தாவுகிறீர்கள்.



இதில் கவலைப்பட
ஒன்றுமில்லை நண்பர்களே...

நீங்கள் தவணை முறையில்
கடவுளாகிக்
கொண்டிருக்கிறீர்கள்!


- காலத்தச்சன்

குழந்தை வரைந்த மழை !




குழந்தையிடம்
மழையை வரையுமாறு
கேட்டுக்கொண்டேன்
அது ஒருவீட்டை வரைந்தது.

மழை எங்கே என்றேன்?
நாம்வீட்டுக்குள் இருக்கிறோம்
மழைவெளியே பெய்கிறது
என்றது குழந்தை!

- தஞ்சாவூர்க் கவிராயர்

Sunday, November 8, 2009

என் காமம்..




வினாத்தாளை
பார்த்தும்
மறந்து போகும்
விடைகளாய்.

உன் மீதான
என் காமம்..

Thursday, October 29, 2009

மேகமாய்...




மேகமாய் உனது அறைகளின் மேலே,
மௌனமாய் இரவில் உலவிடவா?

தாகத்தில் இதழ்கள் தவிப்பதினால்,
ஈரமாய் மழையை உதிர்த்திடவா ???

Wednesday, September 23, 2009

கடவுள் ??




"என்ன வரம்
வேண்டும் கேள்!"
என்றார் கடவுள்

அது கூட
தெரியாத
நீர் என்ன
கடவுள் ??

Friday, September 18, 2009

குறை ஓவியம்!




யாரோ ஒருவரது
அதட்டலால்தான்
குழந்தைகளின் கிறுக்கல்கள்
கிறுக்கல்களாகவே
நின்றுவிடுகின்றன!

- வைகறை

Wednesday, September 16, 2009

இதழ் வளர்த்தல் !!




பனிதனில் குளித்த
பால் மலர் காண
இருபது வசந்தங்கள்
விழி வளர்த்தேன் ...

பசித்தவன் அமுதம்
பருகிட தானே
பதினேழு வசந்தங்கள்
இதழ் வளர்த்தேன் !!

Saturday, September 5, 2009

ஒரு கல்லறை ..



உலகமே
சுடுகாடாய்
இருக்க

உலக
அதிசயமாய்

ஒரு
கல்லறை ..


- கபிலன் வைரமுத்து

Thursday, August 20, 2009

மெய் என்று மேனியை ...




உண்டாவது
ரெண்டாலதான்...

ஊர்போவது
நாலாலதான்..

கருவோடு வந்தது
தெருவோடு போவது...

மெய் என்று
மேனியை
யார் சொன்னது??

Sunday, August 9, 2009

முதியோர் இல்லம்



இதுவும் ஒரு
மிருகக் காட்சி
சாலை தான்..

பால் குடித்த
மிருகங்கள் வந்து
பார்த்து விட்டு
போகின்றன ...!!

Friday, August 7, 2009

கருவறையின் ஈரம் !!




'கமலாவுக்கு ஆம்பளைப் பிள்ளை பொறந்திருக்கான்' எங்கிருந்தோ கேட்கிறது மகிழ்ச்சியின் மொழி.இப்பொது தான் அந்த குழந்தை பிறந்திருக்கிறது.உடம்பு எங்கும் கருவறையின் ஈரம். அந்த குட்டிக் குட்டி கை விரல்கள் மூடியிருக்கின்றன.'ஐயையே .. பாப்பா வழுக்கை!' என்று சிரிக்கிறது பக்கத்தில் நிற்கும் அக்கா பாப்பா .ஒரு மனித உயிரை உற்பத்தி செய்த அம்மா கடவுளின் கண்கள் தளும்பி நிரம்பியிருகின்றன. குழந்தையை கையில் ஏந்தி நிற்கும் தகப்பனின் விரல்கள நடுங்குகின்றன.அந்தக் கணத்தை நம்ப முடியாமல் குழந்தையையும் மனைவியையும் அவன் பார்த்துக்கொண்டே இருக்கிறான்.தான் கை விட வேண்டிய கெட்ட பழக்கங்களின் பட்டியல் அவன் மனதுக்குள் வந்து போகிறது.

யாவரையும் தன வருகையின் மூலம் பூரிப்பூட்டிய குழந்தை, தன மெல்லிய உதடுகள் திறந்து அழத் தொடங்குகிறது !

- ஆனந்த விகடன் 05.08.09

Wednesday, July 29, 2009

முல்லை சொன்னதாம் ..



முல்லைக்கு
தேர் கொடுத்த
பாரியை பார்த்து
முல்லை சொன்னதாம் ..

முதலில் நீ
மரம் வெட்டி
தேர் கட்டுவதை
நிறுத்தும் என்று !!

Thursday, July 23, 2009

வேர்விட்ட கொடியாய் ...




பாறையில்
செய்தது
என் மனமென்று

தோழிக்கு
சொல்லி இருந்தேன் ..

பாறையின்
இடுக்கில்

வேர்விட்ட
கொடியாய்

நீ நெஞ்சில்
முளைத்து
விட்டாய் !!!

Friday, July 10, 2009

ஒரு நதி...




ஒரு நதி
ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் !!!

Wednesday, July 1, 2009

காடாகும் கனவு !!



சிறு தொட்டியின்
ஒருங்கிய
சுவர்களிலிருந்து
மறுகி மறுகிக்
கேட்கிறது

அந்தச் செடியின்
காடாகும் கனவு!!

Thursday, June 25, 2009

உன்னையே மீண்டும்...




கையைச் சுடும்
என்றாலும்,

தீயைத் தொடும்
பிள்ளை போல்,

உன்னையே
மீண்டும்
நினைக்கிறேன்...

Wednesday, June 24, 2009

அமரம் !!



வாழ்வு சேறு
காதல் தாமரை

யாக்கை திரி
காதல் சுடர்

ஜீவன் நதி
காதல் கடல்

பிறவி பிழை
காதல் திருத்தம்

இருதயம் கல்
காதல் சிற்பம்

ஜென்மம் விதை
காதல் பழம்

லோகம் வைதம்
காதல் அத்வைதம்

சருமம் சூனியம்
காதல் பிண்டம்

மானுடம் மாயம்
காதல் அமரம்!!


கொஞ்சம் தேநீர் , நிறைய வானம்
-வைரமுத்து

Tuesday, June 23, 2009

சேலை கசங்கிடாமல் !!



சேலை
கசங்கிடாமல்

நானும்
கட்டிப்பிடிப்பேன் ....!!

ஊரும் மறந்து,
பேரும் மறந்து,
பூமி விட்டு
வா போகலாம் !!!

Friday, June 19, 2009

சங்கீதம்...





தாலாட்டும்
அன்னைக்கெல்லாம்
தங்கள் பிள்ளை
மார்பை முட்டி
பாலுண்ணும்
சத்தம்
சங்கீதம் !!!!

Wednesday, May 20, 2009

நாம் வாழும் வீடு !!




நாம் வாழும் வீடு ,
ஆளில்லா தீவு,
யாருக்கும்
அனுமதி கிடையாது ...

வழிமாறி யாரும்
வந்தாலும் வரலாம்
வீட்டுக்கு
முகவரி கூடாது ...!!!

Sunday, May 17, 2009

தேடிச் சோறுநிதந் தின்று ...




தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

ஆனந்தம் !!!




ஆயிரம் கோடிகள்
செல்வம்,
அது யாருக்கு
இங்கே வேண்டும் ??

அரை நொடி
என்றால் கூட
அந்த ஆனந்தம்
ஒன்றே போதும்...

Friday, May 15, 2009

பொன்மடி !!




மூங்கிலுக்குள்
நுழைகின்ற காற்று
முக்தி பெற்று
திரும்புதல் போல,

உன் மடியில்
சொல்லாய் விழுந்தவன்
கவியாய் முளைத்தேன்,

உன் பொன்மடி வாழ்க !!!!