Showing posts with label இரண்டாம் குழந்தை. Show all posts
Showing posts with label இரண்டாம் குழந்தை. Show all posts

Monday, April 4, 2011

லட்சுமிக் குட்டி!



'ஏழும் மூணும் எத்தன?
இருபதுல
ஆறு போனா எத்தன?’
எனக்
கேள்விகளை
வீசிக்கொண்டு இருந்த
ஆசிரியரிடம்
கேட்பதற்கு
ஒரு கேள்வி இருந்தது
குழந்தையிடம்
'வண்ணத்துப்பூச்சிக்கு
கலர் அடிச்சது யாரு?’

- கண்மணிராசா

Tuesday, January 19, 2010

தமிலை முடிச்சுட்டேன்!'




'ழ' 'ல'வாக
வழுக்கிப்போனது.
'ற' 'ர'ணமாகி
நாராசமானது.
சுழிகளே இல்லாத
'ண'க்கள் பல்லில் தெறித்து
உதடு வழி உதிர்ந்தன.
'அனிச்ச'த்தை மெள்ள மெள்ள
'மொப்பக் குலைத்து'
தேர்வுக்குப் படித்த மகள்
கடைவாயில் தமிழ் ரத்தம்
ஒழுகக் கத்தினாள்
'அம்மா!
தமிலை முடிச்சுட்டேன்!'
அப்படித்தான்பட்டது
எனக்கும்!


-
ப.உமாமகேஸ்வரி

Saturday, January 9, 2010

பெண் வாசம் !!




ஒரு
பூ வாசமே
உன் மேல்
இது நாள் மட்டுமே
கண்டேன்...

அது
பெண் வாசமாய்
மாற
அதை நான்
சுவாசமாய்
கொண்டேன் !!

Flickr Link

Monday, November 16, 2009

குழந்தை வரைந்த மழை !




குழந்தையிடம்
மழையை வரையுமாறு
கேட்டுக்கொண்டேன்
அது ஒருவீட்டை வரைந்தது.

மழை எங்கே என்றேன்?
நாம்வீட்டுக்குள் இருக்கிறோம்
மழைவெளியே பெய்கிறது
என்றது குழந்தை!

- தஞ்சாவூர்க் கவிராயர்

Friday, September 18, 2009

குறை ஓவியம்!




யாரோ ஒருவரது
அதட்டலால்தான்
குழந்தைகளின் கிறுக்கல்கள்
கிறுக்கல்களாகவே
நின்றுவிடுகின்றன!

- வைகறை