Thursday, August 20, 2009

மெய் என்று மேனியை ...




உண்டாவது
ரெண்டாலதான்...

ஊர்போவது
நாலாலதான்..

கருவோடு வந்தது
தெருவோடு போவது...

மெய் என்று
மேனியை
யார் சொன்னது??

Sunday, August 9, 2009

முதியோர் இல்லம்



இதுவும் ஒரு
மிருகக் காட்சி
சாலை தான்..

பால் குடித்த
மிருகங்கள் வந்து
பார்த்து விட்டு
போகின்றன ...!!

Friday, August 7, 2009

கருவறையின் ஈரம் !!




'கமலாவுக்கு ஆம்பளைப் பிள்ளை பொறந்திருக்கான்' எங்கிருந்தோ கேட்கிறது மகிழ்ச்சியின் மொழி.இப்பொது தான் அந்த குழந்தை பிறந்திருக்கிறது.உடம்பு எங்கும் கருவறையின் ஈரம். அந்த குட்டிக் குட்டி கை விரல்கள் மூடியிருக்கின்றன.'ஐயையே .. பாப்பா வழுக்கை!' என்று சிரிக்கிறது பக்கத்தில் நிற்கும் அக்கா பாப்பா .ஒரு மனித உயிரை உற்பத்தி செய்த அம்மா கடவுளின் கண்கள் தளும்பி நிரம்பியிருகின்றன. குழந்தையை கையில் ஏந்தி நிற்கும் தகப்பனின் விரல்கள நடுங்குகின்றன.அந்தக் கணத்தை நம்ப முடியாமல் குழந்தையையும் மனைவியையும் அவன் பார்த்துக்கொண்டே இருக்கிறான்.தான் கை விட வேண்டிய கெட்ட பழக்கங்களின் பட்டியல் அவன் மனதுக்குள் வந்து போகிறது.

யாவரையும் தன வருகையின் மூலம் பூரிப்பூட்டிய குழந்தை, தன மெல்லிய உதடுகள் திறந்து அழத் தொடங்குகிறது !

- ஆனந்த விகடன் 05.08.09