Saturday, November 28, 2009

கடவுளின் குற்றம் !





நீ
ஊரே கொண்டாடும்
சாமிதான்
என்றாலும்
சப்பரம்
தூக்குபவன் தான்
முட்டுக் கொடுக்க
வேண்டும் !

- தாமிரா

மழை நிலா !!




மழையில்
நிலா பார்த்த
இரவில்
நிலவில்
மழை பெய்யும்
கனவொன்று
கண்டேன் !

-முகுந்த் நாகராஜன்

Wednesday, November 18, 2009

இன்னிசை மட்டும்...


இன்னிசை மட்டும்
இல்லையென்றால் நான்
என்றோ என்றோ
இறந்திருப்பேன் !!

செவ்வாய் !!




செவ்வாயில் ஜீவராசி
உண்டா என்றே
தினந்தோறும்
விஞ்ஞானம்
தேடல் கொள்ளும்

உன் செவ்வாயில்
உள்ளதடி
எனது ஜீவன்
அது தெரியாமல்
விஞ்ஞானம்
எதனை வெல்லும்??

Monday, November 16, 2009

கடவுளாதல் !




விடுதி அறை எண் 16-ல்
வன்கலவி நடைபெறுகிறது
அறை எண் 17-ல்
நீங்கள்தொலைக்காட்சிப் பெட்டியின்
ஒலி அளவை உயர்த்திக்கொள்கிறீர்கள்.
அந்த நெரிசல் பேருந்தில்
அந்தப் பள்ளிச் சிறுமியிடம்
அந்த வயோதிகர்அத்துமீறுகிறார்
உங்கள் நிறுத்தத்துக்கு
முன்னமே இறங்கிக்கொள்கிறீர்கள்.
படிக்கப்படாமல் கதறுகிறது
ஏ+ ரத்தம் யாசிக்கும் குறுந்தகவல்
புது மோஸ்தர்
அலைபேசியில்புதிய
நீலப் படங்களைச்
சேமிக்கத் தெரியாமல்
அல்லாடுகிறீர்கள்.
பெருநோய் மூட்டை
ஒன்றுஒன்றே
கால் விரல்களுடன்
ஒரு கை ஏந்துகிறது
செருப்பில் பசை மிட்டாய்
ஒட்டியதாக கள்ள லாகவத்துடன்
நிலம் தேய்த்தபடியே
கடந்து செல்கிறீர்கள்.
அண்டைத் தீவில்
அழுகிய நரகலாய் வாழ்வு
அவசரமாய் பக்கம் திருப்பி
சினிமா செய்திகளுக்குத்
தாவுகிறீர்கள்.



இதில் கவலைப்பட
ஒன்றுமில்லை நண்பர்களே...

நீங்கள் தவணை முறையில்
கடவுளாகிக்
கொண்டிருக்கிறீர்கள்!


- காலத்தச்சன்

குழந்தை வரைந்த மழை !




குழந்தையிடம்
மழையை வரையுமாறு
கேட்டுக்கொண்டேன்
அது ஒருவீட்டை வரைந்தது.

மழை எங்கே என்றேன்?
நாம்வீட்டுக்குள் இருக்கிறோம்
மழைவெளியே பெய்கிறது
என்றது குழந்தை!

- தஞ்சாவூர்க் கவிராயர்

Sunday, November 8, 2009

என் காமம்..




வினாத்தாளை
பார்த்தும்
மறந்து போகும்
விடைகளாய்.

உன் மீதான
என் காமம்..