Thursday, August 20, 2009

மெய் என்று மேனியை ...




உண்டாவது
ரெண்டாலதான்...

ஊர்போவது
நாலாலதான்..

கருவோடு வந்தது
தெருவோடு போவது...

மெய் என்று
மேனியை
யார் சொன்னது??

Sunday, August 9, 2009

முதியோர் இல்லம்



இதுவும் ஒரு
மிருகக் காட்சி
சாலை தான்..

பால் குடித்த
மிருகங்கள் வந்து
பார்த்து விட்டு
போகின்றன ...!!

Friday, August 7, 2009

கருவறையின் ஈரம் !!




'கமலாவுக்கு ஆம்பளைப் பிள்ளை பொறந்திருக்கான்' எங்கிருந்தோ கேட்கிறது மகிழ்ச்சியின் மொழி.இப்பொது தான் அந்த குழந்தை பிறந்திருக்கிறது.உடம்பு எங்கும் கருவறையின் ஈரம். அந்த குட்டிக் குட்டி கை விரல்கள் மூடியிருக்கின்றன.'ஐயையே .. பாப்பா வழுக்கை!' என்று சிரிக்கிறது பக்கத்தில் நிற்கும் அக்கா பாப்பா .ஒரு மனித உயிரை உற்பத்தி செய்த அம்மா கடவுளின் கண்கள் தளும்பி நிரம்பியிருகின்றன. குழந்தையை கையில் ஏந்தி நிற்கும் தகப்பனின் விரல்கள நடுங்குகின்றன.அந்தக் கணத்தை நம்ப முடியாமல் குழந்தையையும் மனைவியையும் அவன் பார்த்துக்கொண்டே இருக்கிறான்.தான் கை விட வேண்டிய கெட்ட பழக்கங்களின் பட்டியல் அவன் மனதுக்குள் வந்து போகிறது.

யாவரையும் தன வருகையின் மூலம் பூரிப்பூட்டிய குழந்தை, தன மெல்லிய உதடுகள் திறந்து அழத் தொடங்குகிறது !

- ஆனந்த விகடன் 05.08.09

Wednesday, July 29, 2009

முல்லை சொன்னதாம் ..



முல்லைக்கு
தேர் கொடுத்த
பாரியை பார்த்து
முல்லை சொன்னதாம் ..

முதலில் நீ
மரம் வெட்டி
தேர் கட்டுவதை
நிறுத்தும் என்று !!

Thursday, July 23, 2009

வேர்விட்ட கொடியாய் ...




பாறையில்
செய்தது
என் மனமென்று

தோழிக்கு
சொல்லி இருந்தேன் ..

பாறையின்
இடுக்கில்

வேர்விட்ட
கொடியாய்

நீ நெஞ்சில்
முளைத்து
விட்டாய் !!!

Friday, July 10, 2009

ஒரு நதி...




ஒரு நதி
ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் !!!

Wednesday, July 1, 2009

காடாகும் கனவு !!



சிறு தொட்டியின்
ஒருங்கிய
சுவர்களிலிருந்து
மறுகி மறுகிக்
கேட்கிறது

அந்தச் செடியின்
காடாகும் கனவு!!